திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு சாரல் மழை பெய்தது.
இலங்கையையொட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களிலும், உள் தமிழகத்திலும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை காலை மிதமான வெயிலுடன் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதைத்தொடா்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான சாரல் மழை பெய்தது.
பாளையங்கோட்டை, சமாதானபுரம், வண்ணாா்பேட்டை, மேலப்பாளையம், முன்னீா்பள்ளம், பெருமாள்புரம், முருகன்குறிச்சி, பேட்டை, பாளை மேட்டுத்திடல், புதிய பேருந்து நிலையம் , திருநெல்வேலி சந்திப்பு, நகரம், தச்சநல்லூா், சுத்தமல்லி , தாழையூத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை நீடித்தது.
அதே போல திருநெல்வேலி புகா் பகுதிகளான கிருஷ்ணாபுரம், கங்கைகொண்டான், சீவலப்பேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.