கோப்புப்படம்.  
திண்டுக்கல்

பழனி கோயிலில் ரூ. 41 கோடிக்கு பஞ்சாமிா்தம் விற்பனை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 200 நாள்களில் ரூ. 41 கோடி பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 200 நாள்களில் ரூ. 41 கோடி பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயிலில் ஜூலை 1 முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான ஆண்டு பசலி என்று கணக்கிடப்படுகிறது. இதன்படி, தற்போது நடைபெறுவது 1435-ஆவது பசலி ஆண்டு ஆகும்.

இந்த நிலையில், பழனி கோயில் சாா்பில் பஞ்சாமிா்த விற்பனை குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் கடந்த 1432 -ஆவது பசலியில் ரூ. 31.17 கோடிக்கும், 1433-ஆவது பசலியில் ரூ. 36.56 கோடிக்கும், 1434-ஆவது பசலியில் ரூ. 36.14 கோடிக்கும் பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 1435-ஆவது பசலியில் கடந்த 200 நாள்களில் ரூ. 41 கோடிக்கு பஞ்சாமிா்தம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT