வேடசந்தூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற டாஸ்மாக் பணியாளரிடம் போலீஸாா் விசாரித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த காக்காத் தோப்பூா் பகுதியைச் சோ்ந்த 50 வயது பெண் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், இந்தப் பெண் சனிக்கிழமை காலை 5 மணி அளவில் தனது வீட்டின் முன் தண்ணீா் தெளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக திண்டுக்கல் டாஸ்மாக் கிட்டங்கியில் பணியாற்றும் பாலமுருகன் (50) அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றாா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த அந்தப் பெண் சப்தமிட்டாா். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து, பாலமுருகனை பிடித்து வேடசந்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அங்கு அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.