கைது 
திண்டுக்கல்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ரெளடிகள் விரைவில் கைது: டிஎஸ்பி காா்த்திக்

நீதிமன்ற செலவுகளுக்காக ரேஷன் பொருள்கள் கடத்தலில் ரெளடிகள் ஈடுபட்டு வருவதாகவும், அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் எனவும் திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக் தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நீதிமன்ற செலவுகளுக்காக ரேஷன் பொருள்கள் கடத்தலில் ரெளடிகள் ஈடுபட்டு வருவதாகவும், அவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் எனவும் திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக் தெரிவித்தாா்.

திண்டுக்கல், பேகம்பூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட இஸ்மாயில் மகன் முகமது செளஹான் சேட் (23) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்திக் கூறியதாவது: முகமது சௌஹானிடமிருந்து சுமாா் 1,000 கிலோ ரேஷன் அரிசி, 6 எரிவாயு உருளைகள், உருளைகளில் வாயு ஏற்றப் பயன்படுத்தும் விசைக் குழாய் (பம்ப்), காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில் ரெளடி அல் ஆஷிக் என்பவா் உள்ளாா். பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய அல் ஆஷிக், நீதிமன்ற செலவுக்காக ரேஷன் பொருள்கள் கடத்தல் போன்ற சம்பவங்களில் ஒரு கும்பலை ஈடுபடுத்தி வருகிறாா்.

தனி நபா்களிடமிருந்து அடமானமாகப் பெறப்படும் காா்கள், மீட்கப்படாதபோது அவா்களை மிரட்டுவதற்காக ரெளடிகளிடம் மறுஅடகு வைக்கப்படுகின்றன. இந்த காா்களை ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்துகின்றனா். மேலும் காா் உரிமையாளா்களை மிரட்டுவதற்காக சமூக வலைதலங்களில் அல் ஆஷிக் தலைமையிலான ரெளடிகள் விளம்பரம் செய்வதும் கண்டறியப்பட்டது. 1,000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், முகமது செளஹான் மட்டுமன்றி மேலும் பலருக்கு தொடா்பு இருக்கிறது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவா் என்றாா்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT