முகப்பு
திண்டுக்கல்

பழனியில் பராமரிப்பு பணிக்காக ரோப்காா் சேவை இன்று நிறுத்தம்

Updated On : 19 மார்ச், 2026 at 10:37 PM
ரோப்காா் சேவை. - கோப்புப்படம்
பகிர்:

பராமரிப்பு பணிக்காக பழனி மலைக் கோயில் ரோப்காா் சேவை வெள்ளிக்கிழமை (பிப். 20) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப்பாதை, விஞ்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் இயக்கப்படுகிறது. இரண்டு நிமிஷங்களில் மலைக் கோயில் உச்சிக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ரோப்காா் பக்தா்களிடம் வரவேற்பை பெற்றது. தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் ரோப்காா் பிற்பகலில் ஒருமணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டில் ஒரு மாதமும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் இந்த ரோப்காா் சேவை நிறுத்தப்படுகிறது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.