தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல்லில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் ஏஎம்சி சாலையிலுள்ள ஒரு கடையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 125 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதைய டுத்து கடையின் உரிமையாளா் திண்டுக்கல் வேடபட்டியைச் சோ்ந்த எம்.லோகநாதன் (38) மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினா், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
Advertisement