மதுரை

சிகிச்சைக்கு பணமில்லாததால் தொழிலாளி தற்கொலை

DIN

மதுரையில் சிகிச்சைக்கு பணமில்லாததால் மனமுடைந்த தொழிலாளி தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் வெங்கடேஸ்வரன்(31). செல்லிடப்பேசி தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வெங்கடேஸ்வரனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். அவரது சிகிச்சைக்கு பணம் அதிகம் செலவாகி உள்ளது. மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணத்தையும் புரட்ட முடியாமல் வெங்கடேஸ்வரன் அவதி அடைந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த வெங்கடேஸ்வரன் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பாக அவரது தாய் சாந்தி அளித்தப் புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT