மதுரை

புகைப் பொருள்கள் விற்பனை: மதுரையில் 131 பேர் மீது வழக்கு

DIN

மதுரை நகரில் 18 வயதுக்குள்பட்டவர்களுக்கு புகைப் பொருள்கள் விற்பனை செய்த 131 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 இது குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மதுரை நகரில் பொது இடங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களில் புகைப் பொருள், புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு தடை உள்ளது.
எனவே, தடையை மீறி இவற்றை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மாநகர் காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில், மாநகரக் காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் போலீஸார் சோதனை நடத்தி, 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 131 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT