மதுரை

மதுரை கிழக்கு வட்டத்தில் மே 24-இல் ஜமாபந்தி துவக்கம்

மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட 7 வருவாய் உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி மே 24 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

DIN

மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட 7 வருவாய் உள்வட்டங்களுக்கான ஜமாபந்தி மே 24 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கிழக்கு வட்டத்துக்கான ஜமாபந்தி அலுவலரான மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர். ஜீவா தலைமையில், பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். அந்தந்த உள்வட்டத்துக்குரிய நாள்களில் பட்டா மாறுதல், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
ஜமாபந்தி நடைபெறும் தேதி, உள்வட்டம் விவரம்: மே 24 - அரும்பனூர், மே 25- சக்கிமங்கலம், மே 26 - ஒத்தக்கடை, மே 30 - ராஜாக்கூர், மே 31 - கள்ளந்திரி, ஜூன் 1 - குன்னத்தூர், ஜூன் 2 - அப்பன்திருப்பதி.   இத்தகவலை, மதுரை கிழக்கு வட்டாட்சியர் ச. கருப்பையா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT