மதுரை

பூட்டிக்கிடக்கும் துணை சுகாதார நிலையங்கள்!

திருப்பரங் குன்றம் பகுதியில் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதாரநிலையங்களை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எம்.மது

திருப்பரங் குன்றம் பகுதியில் பூட்டிக் கிடக்கும் துணை சுகாதாரநிலையங்களை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிராமமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் 5 ஆயிரம் பேர் வசிக்கக்கூடிய கிராமத்திற்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற வீதத்தில் மதுரை மாவட்டத்தில்  314 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டன.
  குடியிருப்பு வசதியுடன் கூடிய இந்த துணை சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள், விபத்தில் சிக்குவோருக்கு முதலுதவி போன்றவை அளிக்கப்படுகிறது.  
மேலும் இந்த குடியிருப்பில் செவிலியர் ஒருவர் தங்கி அன்றாட பணிகளை செய்து வருவார்கள். தற்போது ஒரு சில துணை சுகாதார நிலையங்களில் மட்டுமே செவிலியர்கள் தங்கி பணி புரிந்து வருகின்றனர்.
ஆனால், தென்பழஞ்சி, பெருங்குடி, விளாச்சேரி உள்ளிட்ட பல துணை சுகாதார நிலையங்களில் தண்ணீர், மின்சாரம்,பராமரிப்பு இல்லாத கட்டடம் போன்ற அடிப்படை வசதியில்லாததால் செவிலியர்கள் தங்கி மருத்துவம் பார்க்க இயலாத நிலை உள்ளது என பொதுமக்கள் புகார்கள் கூறுகின்றனர்.  மேலும் பூட்டிக்கிடக்கும் துணை சுகாதாரநிலையங்களை சில சமூக விரோதிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர் எனவும் கூறப்படுகிறது.
இதனால், கிராம மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று நகரத்திற்கு சென்று அரசு மருத்துவமனைக்கும், சிலர் தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்று மருத்துவம் பார்க்க வேண்டி உள்ளது எனக் கூறுகின்றனர்.
ஆகவே, கிராமப்புற மக்களுக்காக உருவாக்கப்பட்ட துணை சுகாதார நிலையங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து செவிலியர் ஒருவர் கூறியது: தற்போது உள்ள துணை சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அடிப்படை வசதி, பாதுகாப்பு இல்லாததாலும் தங்க முடியவில்லை என்றார்.
இது குறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் வி.அர்ஜூன்குமார் கூறியது:  
பழுதான சுகாதார நிலைய கட்டடங்களை சரிசெய்ய பொதுப்பணி துறையினரிடம் கூறியுள்ளோம். அவர்கள் சரிசெய்தவுடன் அனைத்து துணை சுகாதாரநிலையங்களிலும் செவிலியர்கள் தங்கி இருந்து பணிசெய்வார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளிக்கு கத்திக்குத்து: முதியவா் கைது

கோவையில் வேளாண்மை மாநாடு: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

நாளைய மின்தடை: காசிபாளையம், வெண்டிபாளையம், சிப்காட்

வ.உ.சி. நினைவு நாள்: குடியரசு துணைத் தலைவர் அஞ்சலி

திருப்பூரில் தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

SCROLL FOR NEXT