மதுரை

உலக டெங்கு தின சிறப்பு முகாம்

மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி பேரூராட்சியில் உலக டெங்கு தின விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை மாவட்டம், சோழவந்தான், வாடிப்பட்டி பேரூராட்சியில் உலக டெங்கு தின விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
   இம்முகாமுக்கு, மேலக்கால் மருத்துவ அலுவலர்கள் மணிமாறன், மோனிகா ஆகியோர் தலைமை வகித்தனர். செயல் அலுவலர் பாட்ஷா முன்னிலை வகித்தார்.
   இதையொட்டி, நகரில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பழைய டயர்களை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் அகற்றினர். பின்னர், சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளர்கள்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.
   வாடிப்பட்டி பேரூராட்சியில்  நடைபெற்ற முகாமுக்கு, செயல் அலுவலர் ராஜா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT