கிரானைட் முறைகேடு வழக்குகள் விசாரணை தள்ளிவைப்பு
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் மீதான கிரானைட் முறைகேடு வழக்குகளின் விசாரணைகளை, நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் மீதான கிரானைட் முறைகேடு வழக்குகளின் விசாரணைகளை, நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்தினர் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் பதுக்கிவைத்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க அனுமதி கோரி, மதுரைமாவட்ட முன்னாள் ஆட்சியர் இல. சுப்பிரமணியன் 47 வழக்குகள் தாக்கல் செய்திருந்தார். இவை தவிர, கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக கீழவளவு, மேலூர், ஒத்தக்கடை காவல் நிலைய போலீஸார் தாக்கல் செய்திருந்த 18 வழக்குகளும் புதன்கிழமை விசாரணைக்கு வந்தன.
மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு கடந்த 6 மாதங்களாக நிரந்தரமாக மாஜிஸ்திரேட் நியமிக்கப்படவில்லை. இதனால், வழக்குகள் மீதான விசாரணை தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை விசாரணைக்கு வந்த வழக்குகளையும், நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.