மதுரை

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கேள்விக்கு சரியான பதிலளித்த மாணவர்களுக்கு பரிசு

DIN

உசிலம்பட்டி அருகே  டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு கேள்விகளுக்கு சரியான பதிலளித்த பள்ளி மாணவர்களுக்கு திங்கள்கிழமை கோட்டாட்சியர் பரிசளித்து  பாராட்டினார்.
உசிலம்பட்டி அருகே வகுரணியில் டெங்கு தடுப்பு பணியில் உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா, வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர் 
எல்.ஆர்.ராஜன் மற்றும் ஆரம்ப சுகாதார பணியாளர்கள் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். 
மேலும் வகுரணி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, 
மாணவிகளிடம் டெங்கு விழிப்புணர்வு குறித்து கோட்டாட்சியர் சில கேள்விகளை கேட்டறிந்தார். 
அப்போது சரியான பதில்களைத் தெரிவித்த 7 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவர் அழகு 
சுரேஷ் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர் சுமன் ஆகியோரை பாராட்டி கிரிக்கெட் பேட், மற்றும் பந்து பரிசளித்து பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT