தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம்:ஆட்சியர்
தமிழக அரசால் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசால் வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:
சமூக நீதிக்காக பாடுபடுவோருக்கு ஒவ்வோர் ஆண்டும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இவ் விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி, ஒரு பவுன் தங்கப் பதக்கம், தகுதியுரை ஆகியன வழங்கப்படும்.
நிகழ் ஆண்டுக்கான (2017) விருதுக்குரியவர்கள்தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆகவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் பெயர், சுயவிவரம், முழுமுகவரி ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து நவம்பர் 18-ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்பலாம்என தெரிவித்துள்ளார்.