முகப்பு
மதுரை

பாலியல் வன்கொடுமை: இளைஞர் கைது

மதுரையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

மதுரையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து, இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
      மதுரை திடீர்நகர் மேலவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவியின் சகோதரரின் நண்பரான காளிதாஸ் (19),  மாணவியை காதலிப்பதாகக் கூறி தொல்லை அளித்துள்ளார். மேலும்,  2016 டிசம்பரில்  மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில், மாணவிக்கு அக்டோபர் 7-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
     சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில், திடீர் நகர் போலீஸார் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காளிதாஸை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →