மதுரை

நேதாஜி மதுரைக்கு வருகை வந்த தினம்: சிலைக்கு மாலையணிவிப்பு

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்  மதுரைக்கு வருகை தந்த தினத்தை நினைவுகூரும் வகையில், புதன்கிழமை அவரது உருவச் சிலைக்கு பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.

DIN

சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ்  மதுரைக்கு வருகை தந்த தினத்தை நினைவுகூரும் வகையில், புதன்கிழமை அவரது உருவச் சிலைக்கு பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.
கடந்த 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மதுரைக்கு வருகை தந்து பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மதுரைக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.      இரண்டாம் உலகப் போர் நடந்த நிலையில், நேதாஜி மதுரை கூட்டத்தில் பேசிய பிறகு, வேறு எந்த நிகழ்விலும் பங்கேற்கவில்லை.   நேதாஜி மதுரை வந்த தினத்தை நினைவுகூரும் வகையில், புதன்கிழமை  ஜான்சிராணி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நேதாஜி தேசிய இயக்கத் தலைவர் வே. சுவாமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

7வது நாளில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு! பெங்களூரிலிருந்து 127 விமானங்கள் ரத்து

தமிழகத்தில் ஹிந்து தர்மத்தை பின்பற்ற சட்டப் போராட்டம் நடத்தும் நிலை! பவன் கல்யாண்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: ஆதீனங்கள், மடாதிபதிகள் பங்கேற்பு

தங்கம் விலை எவ்வளவு? இன்றைய நிலவரம்!

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

SCROLL FOR NEXT