மதுரை

உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் வசதிகளை மேம்படுத்தக் கோரி மனு: தமிழ் வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

DIN

மதுரையில் உள்ள உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடத்தில் வசதிகளை மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, தமிழ் வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
      மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த பி. ஸ்டாலின் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
      மதுரையில் கட்டப்பட்ட உலகத் தமிழ்ச் சங்கக் கட்டடம் கடந்தாண்டு மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கட்டடம் திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், தமிழ் ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில் தரமான நூல்கள் இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை. இதனால், வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழ் ஆர்வலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். எனவே, தரமான நூல்களை வைக்கவும், தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
       இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், என். சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ் மொழியை வளர்க்க தரமான நூல்களைப் படிப்பது அவசியம்.
மேலும், தமிழராகிய நாம் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, உலகத் தமிழ்ச் சங்க கட்டடத்தில் தேவையான புத்தகங்களை வைப்பது மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை முதன்மைச் செயலர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT