முகப்பு
மதுரை

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு தடகளப் போட்டி

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கியது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:10 am IST
பகிர்:

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கியது.
 மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டுத் திடலில் தொடங்கிய இப்போட்டியில் தமிழகம், புதுச்சேரி, அந்தமான், கேரள மாநிலங்களைச் சேர்ந்த 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் 185 மாணவிகள் பங்கேற்றனர். 
 தொடக்க நிகழ்ச்சியில் சர்வதேச கூடைப்பந்தாட்ட வீரர் ஹரிஹரசுதன் பங்கேற்று தொடங்கிவைத்தார்.  இதைத்தொடர்ந்து, ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டிகளில் ஊட்டி மற்றும் சென்னை ஆவடி பகுதியைச் சேர்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவியர் அதிக போட்டிகளில் வென்றனர்.
100 மீ., ஓட்டத்தில் சென்னை ஆவடி ஹரினிஸ்ரீ (14 வயது பிரிவு), காரைக்குடி சுபாஷினி (17 வயது பிரிவு), கோவை தனுஸ்ரீ (19 வயது பிரிவு) ஆகியோர் முதலிடம் பிடித்தனர். புதன்கிழமை போட்டிகளின் நிறைவு விழா நடைபெறவுள்ளது. அதில் பள்ளிகள் வாரியாக முதலிடம் வகிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் டி.செல்வராஜ், உடற்பயிற்சி ஆசிரியர் எஸ்.மலைச்சாமி ஆகியோர் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.