முகப்பு
மதுரை

திருமங்கலத்தில் கால்நடை மருத்துவர் வீட்டில்  ஏழரை பவுன் நகை, ரூ.5 லட்சம் திருட்டு

திருமங்கலத்தில் கால்நடை மருத்துவர் வீட்டில் ஏழரை பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:06 am IST
பகிர்:

திருமங்கலத்தில் கால்நடை மருத்துவர் வீட்டில் ஏழரை பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 
திருமங்கலம் கணபதி நகரைச் சேர்ந்தவர் திருவள்ளுவன் (50). இவர், திருமங்கலம் அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராக உள்ளார். இவரது மனைவி சாந்தி. திருமங்கலத்தை அடுத்த புங்கங்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். இவர்கள் இருவரும் திங்கள்கிழமை காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனராம்.  மீண்டும் மாலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அலமாரியில் வைத்திருந்த ஏழரை சவரன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியன திருடுபோனது தெரியவந்தது. 
இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின்பேரில் திருமங்கலம் நகர் போலீஸார்  வழக்குப்பதிந்து, விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.