வளையங்குளத்தில் 25 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, வளையங்குளத்தில் 25 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு, வளையங்குளத்தில் 25 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள வரும் கள்ளழகரை எதிர்சேவையில் தரிசிக்க, ஆண்டுதோறும் அவனியாபுரத்தை அடுத்த வளையங்குளம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புறப்படுவது வழக்கம். இதையொட்டி, எதிர்சேவை அன்று வளையங்குளம் கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடத்தப்படுவதும் வழக்கம். இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை எதிர்சேவையை முன்னிட்டு, வளையங்குளம் தான்தோன்றி லிங்கப் பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு காலையில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. அதையடுத்து, மந்தைத் திடலில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், பாரபத்தி, வளையங்குளம், கூடக்கோவில், குதிரைகுத்தி, ஈச்சாநோடை கிராமத்தினர் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.