முகப்பு
மதுரை

பேருந்து மோதி விவசாயி சாவு

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மதுரையில் இரு சக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில், விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
     மதுரை அருகே உள்ள செக்கானூரணி புளியங்குளத்தைச் சேர்ந்த தங்கம் மகன் விவசாயி பழனிக்குமார் (39). இவர் தனது உறவினரான சின்னச்சாமி என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை மதுரைக்கு வந்துள்ளார். விராட்டிபத்து அருகே வந்துகொண்டிருந்த போது, மதுரையில் இருந்து தேனி நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில், பழனிக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உறவினர் சின்னச்சாமி பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.    இது குறித்து பழனிக்குமார் உறவினர் கிருஷ்ணகுமார் அளித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →