முகப்பு
மதுரை

சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி சாவு

தே.கல்லுப்பட்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

தே.கல்லுப்பட்டி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்ற பெண் மீது இரு சக்கர வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி கேசவம்மாள் (54). இவர், கே. சத்திரப்பட்டியில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவ்வழியாக அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், கேசவம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக தே. கல்லுப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →