மதுரை

திருப்பரங்குன்றத்தில் சிவராத்திரி வழிபாடு

தினமணி

திருப்பரங்குன்றம் பகுதி சிவாலயங்ளில் செவ்வாய்க்கிழமை இரவு சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன.
   திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள சத்தியகிரீஸ்வரர் சன்னதியில் இரவு 9.30 மணிக்கு முதற்கால பூஜை தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. ஒவ்வொரு பூஜையின்போதும் சுவாமிக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள் ஆராதனைகள் நடைபெற்றன. 
 திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு சிவராத்திரி விழாவினையொட்டி பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. ருத்திராட்சை, நாகாபரணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 
 திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் சிவராத்திரி விழாவினை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. 
 பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் காசி விஸ்வநாதருக்கு சிவராத்திரியை 
முன்னிட்டு சந்தனம், பால், இளாநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT