முகப்பு
மதுரை

சாலைத்தடுப்பில் மோதி கவிழ்ந்தது லாரி:  சாலையில் ஆறாக ஓடிய பால்

மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் சாலைத்தடுப்பில் மோதிய ஆவின் ஒப்பந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததில் சாலையில் பால் ஆறாக புதன்கிழமை ஓடியது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

மதுரை அருகே நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் சாலைத்தடுப்பில் மோதிய ஆவின் ஒப்பந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததில் சாலையில் பால் ஆறாக புதன்கிழமை ஓடியது.
மதுரையில் இயங்கி வரும் ஆவின் பால் நிறுவனத்துக்கு மதுரை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் பாலை ஏற்றிவருவதற்காக ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து பாலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி மதுரை ஆவின் நிறுவனத்துக்கு புதன்கிழமை அதிகாலை வந்துள்ளது. லாரியை பேரையூரைச் சேர்ந்த முனியாண்டி (41) ஓட்டி வந்துள்ளார். நாகமலைபுதுக்கோட்டை ராஜம்பாடி அருகே அதிகாலை 3.30-க்கு வந்தபோது சாலைத் தடுப்பில் மோதி லாரி கவிழ்ந்தது. இதில் லாரியின் டேங்கர் சேதமடைந்ததால் அதில் இருந்த 6 ஆயிரம் லிட்டர் பால் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. இதுதொடர்பான தகவலின்பேரில் மாற்று லாரி கொண்டு வரப்பட்டு டேங்கரில் மிச்சம் இருந்த பால் கொண்டு செல்லப்பட்டது.
 

முழு கட்டுரையைப் படிக்க →