மதுரை

பழனி பாத யாத்திரை  பக்தர்களுக்கு அன்னதானம்

DIN

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்  பழனி பாத யாத்திரை பக்தர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
தைப்பொங்கல் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம். அவ்வாறு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு பழனி பால தண்டாயுதபாணி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தன்று அன்னதானம் வழங்குவது வழக்கம். அதன்படி 10-ஆம் ஆண்டு அன்னதானம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.  
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை பாத யாத்திரை பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது. 
இதில் ஆங்கில மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவ முறையிலும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாடிப்பட்டி பகுதிக்கு இரவில் வரும் பக்தர்கள் தங்கிச்செல்லவும், குளிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதயாத்திரை பக்தர்கள் இவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பழனி பாலதண்டாயுதபாணி அறக்கட்டளை நிர்வாகி சுவாமி சாஸ்வதானந்தர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT