இளைஞர் வெட்டிக் கொலை
மதுரையில் இளைஞரை, மர்ம கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்தது.
மதுரையில் இளைஞரை, மர்ம கும்பல் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்தது.
மதுரை வாழைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேல்குமார் (27). இவர் திமுக பிரமுகர் வி.கே.குருசாமியின் உறவினர். இந்நிலையில், வேல்குமார் தன் நண்பர்களோடு பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒரு கும்பல் வேல்குமாரை சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதுகுறித்து கீரைத்துரை போலீஸார் வழக்குப்பதிந்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.