முகப்பு
மதுரை

கோயில் வளாகக் கடைகளை அகற்ற தடை கோரி வழக்கு: இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவு

கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்வது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

கோயில் வளாகங்களில் உள்ள கடைகளை காலி செய்வது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த கடைகள் சேதமடைந்தன. இதையடுத்து தமிழகத்தில் முக்கியக் கோடில்களில் உள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றக்கோரி கடை உரிமையாளர்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது.
 இந்த நோட்டீûஸ ரத்து செய்யக்கோரி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்ட கோயில் வளாகங்களில் கடைகள் வைத்துள்ள கடை உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி, கோயில் வளாகத்தில் கடைகள் நடத்துவோருக்கு மாற்றுஇடம் ஒதுக்கித் தர வேண்டும். இதுதொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை மார்ச் 16 ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை கடைகளை காலி செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →