முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் விதிமுறை: ஆணையத்தின் அனுமதியின்றி இவற்றைச் செய்யலாம்!

தேர்தல் நடத்தை விதிகள் அமலானாலும் சில பணிகளை தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அரசு முகமை தொடரலாம். அவை குறித்து...

Updated On : 15 மார்ச், 2026 at 8:30 PM
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் - படம் - பிடிஐ
பகிர்:

தேர்தல் விதிமுறைகள் அமலானதைத் தொடர்ந்து, அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், சில பணிகளைத் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி இன்றி அரசு முகமைகள் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Advertisement

இதேபோன்று புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 ஆம் தேதியும், மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும், விளம்பரங்களில் கட்டுப்பாடு உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

முறைகேடு இன்றி அமைதியான முறையில் தேர்தலை நடத்தி முடிப்பதற்காக இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. எனினும், சில பணிகளைத் தேர்தல் ஆணையத்தின் முன்அனுமதி இன்றி அரசு முகமைகள் தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை:

  • முழு நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளவை.

  • நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் நிதி ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளவை.

  • டெண்டர் அறிவிக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ள இனங்கள்.

  • ஒரு திட்டத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், நடத்தை விதிகள் அமலுக்கு வரும்போது களத்தில் பணிகள் தொடங்கப்படவில்லை எனில், தேர்தல் முடியும் வரை அந்தப் பணியைச் செயல்படுத்தக்கூடாது.

  • குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணியைத் தொடங்கவும் முடிக்கவும் ஒப்பந்த கடமை உள்ளது. மேலும் தவறினால் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதிக்கும் கடமை உள்ளவை

  • தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பே, பெயரிடப்பட்ட பயனாளிகள் கண்டறியப்பட்ட பயனாளி சார்ந்த திட்டங்கள்.

  • நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி. நிதித்துறையின் ஒப்புதலுடன், முடிவடைந்த பணிகளுக்கான நிதியை விடுவித்தல்.

  • முதலமைச்சரின் நிவாரண நிதி அல்லது பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நோயாளிகளுக்கு நேரடியாகப் பணம் வழங்குவதற்குப் பதிலாக, மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் செலுத்தப்படும் தொகைகள்

  • ஒத்திவைக்க முடியாத இதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை போன்ற பல்வேறு நேர வரையறை கொண்ட சிகிச்சைகளுக்கு பிரதமரின் நிவாரண நிதி அல்லது முதலமைச்சரின் நிவாரண நிதியின் கீழ் மருத்துவ உதவியை தொடர்புடைய அரசு அதிகாரிகள் அல்லது தனியார் மருத்துவமனைகளின் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்குதல்

புதிய பணிகள் (நிபந்தனைகளுக்கு உட்பட்டவை) :

  • புதிய திட்டங்கள், சலுகைகள் அல்லது நிதி உதவித் தொகைகளை அறிவிப்பது அல்லது அதற்கான வாக்குறுதிகள் அளிப்பது அல்லது அடிக்கல் நாட்டுதல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.

  • புதிய பணிகள் (பயனாளி அல்லது பணி சார்ந்தவை) தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவித்துவிட்டுத் தொடங்கப்படலாம். ஆனால், நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பே சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்:

  • பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைத் தணிக்க எடுக்கப்படும் அவசரகால நிவாரணப் பணிகள் ஆகியவற்றை நிபந்தனைகளுக்குட்பட்டு தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் - முழு விவரம், இங்கே கிளிக் செய்யவும்

summary

TN Election 2026 You can do these things without the permission of the Election Commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.