முகப்பு
மதுரை

மக்கள் தொடர்பு முகாம்

மதுரையை அடுத்த சோளங்குருணி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 61 ஆயிரத்து

Updated On : 29 மார்ச், 2018 at 8:20 AM
பகிர்:

மதுரையை அடுத்த சோளங்குருணி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.49 லட்சத்து 61 ஆயிரத்து 36 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் வழங்கினார்.
 இந்த முகாமில் ஆட்சியர் பேசியது:  அம்மா திட்ட முகாம் மூலமாக இதுவரை 1 லட்சத்து 87 ஆயிரத்து 427 மனுக்கள் பெறப்பட்டு தகுதிவாய்ந்த 1 லட்சத்து 10 ஆயிரத்து 401 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. சமூக நலத்துறையின் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.176 கோடி செலவில் 49 ஆயிரத்து 154  பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 1 லட்சத்து 77 ஆயிரத்து 161 பேருக்கு அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.  இதுபோன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் 202 பயனாளிகளுக்கு  ரூ.49 லட்சத்து 61 ஆயிரத்து 36 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.