முகப்பு
மதுரை

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் நினைவு தினம்

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் நினைவு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On : 21 மே, 2018 at 6:37 AM
பகிர்:

சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் நினைவு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் 
12-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மதுரை சொக்கிகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலரும், மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தமது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலர்களான வ. வேலுசாமி, கோ. தளபதி, கட்சியின் தலைமை தணிக்கைக் குழு உறுப்பினர் பெ. குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் தமிழரசி, மாநகர் மாவட்ட  அவைத் தலைவர் மிசா பாண்டியன், துணைச் செயலர் சின்னம்மாள், பகுதிச் செயலர்கள் பொன். வசந்த், சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மின்னல் கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.