கலை பண்பாட்டுத்துறை விழாவில் ஓவியக் கலைஞர்களுக்கு பரிசளிப்பு
மதுரை மாவட்ட கலை பண்பாட்டுதுறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிற்பக்கலை கண்காட்சி
மதுரை மாவட்ட கலை பண்பாட்டுதுறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிற்பக்கலை கண்காட்சி நிறைவு விழாவில் ஓவியக் கலைஞர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
மதுரை கலைபண்பாட்டுத்துறை சார்பில் சிற்பக்கலை கண்காட்சி மற்றும் ஓவியக் கலைஞர்களுக்கான ஓவியக் கண்காட்சி நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் தலைமை வகித்துப் பேசியது: கலை மற்றும் பண்பாட்டின் காலக்கண்ணாடியாக ஓவியம், சிற்பம் திகழ்கிறது.
ஓவியம், சிற்பக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை விருதுகள் அரசால் வழங்கப்படுகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஆண்டு தோறும் கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுவருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகளுக்கான மதுரை மாவட்ட சிறந்த ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றுகளும் ஆட்சியரால் வழங்கப்பட்டன. விழாவில் மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் மு.க.சுந்தர், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் க.பசும்பொன், அரசு இசைக் கல்லூர் முதல்வர் சி.டேவிட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.