மதுரை

பிரம்மா குமாரிகள் கொலு கண்காட்சி தொடக்கம்

DIN

பிரம்மாகுமாரிகள் அமைப்பின் சார்பில் மதுரை ஆண்டாள்புரத்தில் பஞ்சலிங்க தலங்கள் மாதிரிகள் உள்ளிட்ட கொலு அலங்கார அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
  பிரம்மாகுமாரிகள் மதுரை துணை மண்டலம் சார்பில் ஆண்டாள்புரம் தியான அறையில் கொலுக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. பிரம்மாகுமாரிகள் அமைப்பின் மதுரை துணை மண்டல இயக்குநர் பி.கே.மீனாட்சி அரங்குகளைத் தொடங்கி வைத்தார். 
  பஞ்சலிங்க பூதங்களைக் குறிக்கும் வகையில், நிலத்துக்கு சிதம்பரம் ஏமாக்பரேஸ்வரர், நீருக்கு திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர், காற்றுக்கு ஆந்திர மாநிலம் காலகஸ்தீஸ்வரர், நெருப்புக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், ஆகாயத்துக்கு சிதம்பரம் நடராஜர் ஆகிய அரங்குகள் கொலுவில்  இடம் பெற்றுள்ளன. 
 மேலும், பொற்கால பாரதம், சிறப்பு தியானஅரங்குகளும் கொலுவில் உள்ளன. பொதுமக்களுக்கு இலவசமாக தியானப் பயிற்சியும் வழங்கப்பட்டுவருகிறது. தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்மணி அறக்கட்டளையைச் சேர்ந்த ரம்யா, ஜெயந்திராஜூ, பிரம்மாகுமாரி செந்தாமரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும் கொலு அலங்காரத்தை பொதுமக்கள் மாலையில் கண்டு தரிசிக்கலாம் எனவும் பிரம்மாகுமாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT