மதுரை

அரசுப் பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறுகளில் நீட் தேர்வு: சிறப்பு வகுப்புகளுக்கு நியமிக்கத் தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

DIN

அரசுப் பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறுகளில் நீட் தேர்வு சிறப்பு வகுப்புகளுக்கு நியமிக்க தடை கோரிய மனு தொடர்பாக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
    தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
 2018 - 2019 கல்வி ஆண்டில் நீட் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் அரசு பள்ளிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்தில் இருந்தும் இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய பாடங்களைப் பயிற்றுவிக்க 10 ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர். அந்த ஆசிரியர்கள் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள்.  பள்ளி வேலை நாள்களிலும் அதிக சிரத்தையுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்து கொடுக்கும் ஆசிரியர்களை சனி, ஞாயிறு கிழமைகளிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறப்பு பயிற்சி வழங்க கட்டாயப்படுத்துவதால் அவர்களின் உடல் நிலையும், மன நிலையும் பாதிப்படைகிறது.  எனவே அரசு பள்ளி ஆசிரியர்களை சனி, ஞாயிறு கிழமைகளில் நடைபெறும் நீட் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பள்ளி கல்வித்துறை இயக்குநர், பள்ளி கல்வித்துறைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT