முகப்பு
மதுரை

7 ஆண்டுகளுக்கு பிறகு சிங்கம்புணரி விரிவாக்க கால்வாயில் 20 நாள்களுக்கு தண்ணீர் திறப்பு

பெரியாறு பாசனம் மேலூர் பிரதான கால்வாய் புலிப்பட்டி மதகிலிருந்து சிங்கம்புணரி வரையிலான விரிவாக்க

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:47 AM
பகிர்:

பெரியாறு பாசனம் மேலூர் பிரதான கால்வாய் புலிப்பட்டி மதகிலிருந்து சிங்கம்புணரி வரையிலான விரிவாக்க கால்வாய் பகுதி குளங்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
 இந்நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் முன்னிலை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தண்ணீரை திறந்துவைத்து, பேசியதாவது:  கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பின் சிங்கம்புணரி விரிவாக்க கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேலூர் தாலுகாவில் 9 கிராமங்களும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவில் 8 கிராமங்கள் பயன்பெறும். தற்போது, வினாடிக்கு 200 கன அடி வீதம் 20 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இப்பகுதியில் 363 பாசன குளங்களில் நீர் நிரப்பப்படும்.  இதன்கீழ் 13,989.79 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.