இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு
திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த எல்.ஐ.சி. ஊழியர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருமங்கலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த எல்.ஐ.சி. ஊழியர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருமங்கலம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (40). எல்.ஐ.சி யில் பணிபுரிகிறார். இவர் கடந்த மாதம் 27 ஆம் தேதி விரகனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கருவேலம்பட்டி விலக்கு அருகே நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.