மதுரை

வைகை ஆற்றின் ஆக்கிரமிப்பு அகற்றப்படும்: மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வாக்குறுதி

வைகை ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி 

DIN

வைகை ஆற்றின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், வழக்குரைஞருமான எம்.அழகர், பொது மக்களிடம் வாக்குறுதி அளித்து வாக்குச் சேகரித்தார்.
மதுரை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டுவந்த அழகர் ஞாயிற்றுக்கிழமை ஊரகப்பகுதிகளில் பிரசாரம் செய்தார். இதையடுத்து பரவையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு அவர் பிரசாரத்தை தொடங்கினார். வாக்கு சேகரிப்பின்போது, அப்பகுதி மக்கள் வைகை ஆற்றை ஒட்டிய பகுதியாக இருந்தாலும், தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 
அதற்கு என்னை வெற்றி பெறச் செய்தால், வைகை ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும். குடிநீர்  தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார். பரவையில் தொடங்கிய பிரசாரப் பயணம் பரவை காலனி, ஊர்மெச்சிகுளம், கோவில்பாப்பாகுடி, கூடல்நகர், விளாங்குடி, கரிசல்குளம், பெத்தானியாபுரம், கோச்சடை, சொக்கலிங்க நகர், எச்எம்எஸ் காலனி, பாண்டியன் நகர் உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்றது. 
இதில் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் வி.பி.மணி, வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் எம்.ஐயூப்கான், தொகுதிப் பொறுப்பாளர்கள் முருகன், பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

SCROLL FOR NEXT