மதுரை

பணப்பட்டுவாடா: உசிலம்பட்டி, திருமங்கலத்தில் அமமுக, அதிமுகவினர் உள்பட 4 பேர் கைது: ரூ.1.72 லட்சம் பறிமுதல்

DIN

உசிலம்பட்டி, திருமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுக, அமமுக உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.1.72 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 
 திருமங்கலத்தை அடுத்த கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த பரமசிவன் மகன் ராமசாமி(45). இவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக பறக்கும்படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பறக்கும் படை அலுவலர் முகமது ஷாஜகான் தலைமையிலான அதிகாரிகள் ராமசாமியை கைது செய்து அவரிடமிருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பணத்தை சிந்துபட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிந்துபட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 
இதேபோல திருமங்கலத்தை அடுத்த சுங்குராம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(39). அமமுக கிளைச்செயலர். அதேபகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(33). இவர்கள் இருவரும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் அழகர்சாமி இருவரையும் சோதனையிட்டார். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரத்து 800 பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.  
அதிமுக கிளை செயலர் கைது: உசிலம்பட்டி அருகேயுள்ள குப்பணம்பட்டியைச்  சேர்ந்த துரைச்சாமித்தேவர் மகன் ராசு(69). இவர் அப்பகுதியின் அதிமுக கிளை செயலராக உள்ளார். வாக்காளர்களுக்கு ராசு பணம் கொடுப்பதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 
இத்தகவலின் பேரில் வட்டாட்சியர் தமிழ்செல்வி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த ராசுவை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து  ரூ.1லட்சத்து 6ஆயிரத்தை பறிமுதல்  செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT