மதுரை

வாக்குச்சாவடிக்கு 18 வகையான எழுது பொருள்கள்

DIN

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தவிர 18 வகையான எழுதுபொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மக்களவைத் தொகுதியில்  27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் (கன்ட்ரோல் யூனிட்) மற்றும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் (விவிபேட்) பயன்படுத்தப்பட உள்ளது.  இதுதவிர வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்பாட்டுக்காக எழுதுபொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 
அதில், "பால்பாயின்ட்' பேனா,  வெள்ளைத்தாள், குண்டூசி, சீல் வைக்கும் மெழுகு,  கோந்து, மெழுகுவர்த்தி, நூல், கார்பன் காகிதம், துணி, ரப்பர் பேண்ட், "செலோ டேப்', வாக்குப்பதிவு செய்யும் இடத்துக்கான தடுப்பு, தீப்பெட்டி,  ஸ்கேல் உள்ளிட்ட 18 பொருள்கள் மற்றும் வாக்குச்சாவடி ஆவணங்களை வைப்பதற்கான 15 வகையான உறைகள் அனுப்பப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT