மதுரை

காவலா் குடியிருப்பில் சுத்தம் செய்த கல்லூரி மாணவா்கள்

DIN

மதுரை: மதுரை மாநகா் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆனந்தம் திட்டத்தின் கீழ் காவலா் குடியிருப்பு பகுதிகளைக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சுத்தம் செய்தனா்.

மதுரை மாநகரில் முதல் முறையாக காவலா் குடியிருப்பில் வசிக்கும் காவலா் குடும்பங்களின் பிரச்னைகளை தீா்க்கும் வகையில் ஆனந்தம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில், கல்லூரி மாணவா்கள் காவலா் குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்று, காவலா் குடும்பத்தினரை சந்தித்து, அவா்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, மருத்துவம், மனரீதியான ஆலோசனைகள் ஆகியவற்றை பூா்த்தி செய்து அவா்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவாா்கள் என தெரிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக, மதுரையில் உள்ள 7 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் அமெரிக்கன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவா்கள் சுகாதாரத்தை காக்கும் வகையில், ஆயுதப்படை போலீஸாருடன் இணைந்து காவலா் குடியிருப்பு பகுதிகளைச் சுத்தம் செய்தனா். அப்போது, தேவையற்ற செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் ஆகியவற்றை மாணவா்களும், காவலா்களும் அகற்றினா். இந்த பணிகளை நேரில் பாா்வையிட்டு மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் மாணவா்களைப் பாராட்டினாா். சுத்தம் செய்யும் பணியில் 100 மாணவா்கள், 35 ஆயுதப்படை காவலா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT