மதுரை

புதிய அறுவை சிகிச்சை அரங்கு கட்டுமானம்: அரசு மருத்துவமனையில் கருத்துக் கேட்புக் கூட்டம்

DIN

மதுரை அரசு மருத்துவமனையில் புதிய அறுவைச் சிகிச்சை அரங்கு கட்டுவது தொடர்பான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் ரூ.150 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அறுவைச்சிகிச்சை அரங்கு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையின் பிரதான வாயிலில் உள்ள வார்டுகளை இடித்து அங்கு புதிய அறுவைச்சிகிச்சை அரங்கு கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டது. ஆனால், மருத்துவமனையின் பழமை வாய்ந்த கல் கட்டடத்தை இடிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பின.
அதையடுத்து, அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா மற்றும் துறைத்தலைவர்கள், மருத்துவர்கள் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில் மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். இதில், பிரதான வாயில் பகுதியில் அறுவைச் சிகிச்சை அரங்கு கட்டுவது தொடர்பாக மருத்துவர்கள் பலரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவித்தனர். பொதுமக்கள் அறுவைச்சிகிச்சை அரங்கு அமைவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.  ஹென்றி திபேன் கூறுகையில், "அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க வேண்டும். எனவே, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார். அதையடுத்து மீண்டும் கூட்டத்தை நடத்த இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT