மதுரை

இக்னோ பல்கலை.யில் எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு

DIN

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) எஸ்.சி, எஸ்.டி, பிரிவு மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
 இப் பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தற்போது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர்க்கை பெற கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. கல்விக்கட்டண விலக்கு கோருபவர்கள் பணிபுரிபவராக இருக்கக்கூடாது. கல்விக்கட்டண விலக்கு பெற விரும்பும் மாணவர்கள் உரிய படிவங்களை w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து உரிய சான்றுகளுடன், மதுரையில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மேலும் சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் சேர்க்கை பெற கடைசித்தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று இக்னோ மதுரை மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT