மதுரை

மேம்பாலப் பணிக்காக அகற்றப்பட்ட 11 மரங்கள்: மாநகராட்சி வளாகத்தில் நடப்பட்டன

DIN

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மேம்பாலப் பணிக்காக 11 மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு மாற்று இடத்தில் வியாழக்கிழமை நடப்பட்டன.
மதுரை-நத்தம் பறக்கும் சாலை திட்டத்தின் கீழ் அவுட்போஸ்ட் பகுதியில் இருந்து செட்டிகுளம் வரை 7 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பால பணிக்காக மதுரை நத்தம் சாலையில் இருந்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டன. 
இதில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை பகுதியில் மேம்பாலம் முடிவடைவதால் அங்கு சாலை விரிவாக்கப் பணிக்காக மாநகராட்சிக்கு சொந்தமான இடமும் எடுக்கப்பட்டுள்ளது. 
இதையடுத்து சாலை விரிவாக்கப்பணிக்காக அறிஞர் அண்ணா மாளிகை வளாகத்தில் இருந்த சுற்றுச்சுவர் அகற்றப்பட்டு இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.  
இந்நிலையில் விரிவாக்கப் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள பழைமையான மரங்களை வெட்டாமல் வேரோடு அகற்றி மாற்று இடத்தில் நடுமாறு மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இதையடுத்து அப்பகுதியில் இருந்த 8 வேப்ப மரங்கள் உள்பட 11 மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு மாநகராட்சி உள் வளாகத்தில் மீண்டும் நடப்பட்டன. மரங்கள் நடும் பணியை மாநகராட்சி ஆணையர் ச.விசாகன் வியாழக்கிழமை பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யார் இந்த நடன மங்கை?

பிரதமர் மோடி ஒரு பொய்யர்: சரத் பவார் காட்டம்!

தில்லி பள்ளிகளில் பாதியாகக் குறைந்த மாணவர்களின் வருகை!

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT