மதுரை

மதுரையில் 6 டன் கலப்பட  மஞ்சள்  பறிமுதல்

DIN

மதுரையில் 10 கிட்டங்கிகளில் இருந்த 6 டன் கலப்பட மஞ்சளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
 மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் சிக்கந்தர் சாவடியில் பகுதியில் உள்ள கிட்டங்கிகளில் 19 அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 10 கிட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சளில் கலப்படம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் 6 டன் மஞ்சளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோமசுந்தரம் கூறியது: கலப்படம் செய்யப்பட்ட மஞ்சளை விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கிட்டங்கியை மூடுவதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடோன்களை ஆய்வு செய்ய உள்ளோம். இந்த ஆய்வு 10 தினங்களுக்கு நடைபெறும் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT