மதுரை

மதுரை மாநகர காவல்  ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

DIN

மதுரையில் போலீஸார் தடியால் தாக்கியதில் இளைஞர் கீழேவிழுந்து இறந்த சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநகர காவல் ஆணையருக்கு, மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
 மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் விவேகானந்த குமார். இவர் சனிக்கிழமை இரவு சிம்மக்கல் வைகையாற்று பாலம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அங்கு வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் தடியால் தாக்கியதில் கீழேவிழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் சார்பில், மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதில் விவேகானந்தகுமார் இறப்பு சம்பவம் குறித்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

SCROLL FOR NEXT