மதுரை

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஹார்விபட்டியில் கையெழுத்து இயக்கம்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் ஹார்விபட்டியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் சார்பில் ஹார்விபட்டியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையெழுத்து இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் 17-ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் மற்றும் அழகர்கோயிலில் இருந்து வரும் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்களிக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை தேர்தல் ஆணையம் நீட்டிப்பு செய்துள்ளது. 
இந்நிலையில் திருவிழாவிற்கு செல்லும் மக்கள் வாக்களிக்காமல் சென்று விடக்கூடாது என்றும்,  சுவாமியும் முக்கியம், வாக்களிப்பதும் முக்கியம் என்பது போன்ற வாசகங்களை அடங்கிய பேனர்களில் பொதுமக்களிடம் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜன் தலைமையில் கையெழுத்து  இயக்கம்  நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மக்களவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிப்பேன் என உறுதியளிக்கும் விதத்தில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அழகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT