மதுரை

டிஜிட்டல் சேவைக்கு மாறாத கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு மாறாத கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் எச்சரித்துள்ளார்.

DIN

டிஜிட்டல் ஒளிபரப்புக்கு மாறாத கேபிள் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அனலாக் முறை நிறுத்தப்பட்டது, தற்போது டிஜிட்டல் முறையில் செட்ஆப் பாக்ஸ்கள் மூலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலமாக இந்த டிஜிட்டல் ஒளிபரப்பு சேவை வழங்கப்படுகிறது.
சில உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்கள்,  எம்எஸ்ஓ-க்கள் இன்னும் அனலாக் சேவையை ஒளிபரப்பு வருகின்றனர். இது கேபிள் தொலைக்காட்சி ஒழுங்குமுறைச் சட்டத்தின்கீழ் குற்றமாகும். ஆகவே,  அனலாக் முறை ஒளிபரப்பு சேவையை கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT