மதுரை

கூலித் தொழிலாளி வீட்டில் 11.5 பவுன் நகைகள் திருட்டு

DIN


மதுரையில் கூலித் தொழிலாளி வீட்டின் கதவை உடைத்து 11.5 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கதிரேசன் (63). இவர் யானைக்கல் பழச்சந்தையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கதிரேசன் சனிக்கிழமை காலையில் வீட்டை பூட்டி விட்டு சரஸ்வதி நதி தெருவில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி உள்ளார். வீட்டின் முன்பக்க கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்ற போது பின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. 
மேலும், பீரோவில் இருந்த துணிகள் வீடு முழுவதும் சிதறிக் கிடந்துள்ளது. இதையடுத்து கதிரேசன் கூடல்புதூர் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வீட்டை சோதனையிட்டதில் பீரோவில் இருந்த 11.5 பவுன் நகைகள், ரூ. 7 ஆயிரம் திருடுப் போனது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT