மதுரை

பட்டதாரி ஆசிரியா் பணிக்கு சான்றிதழ் சரி பாா்ப்பு

DIN

மதுரை: ஆசிரியா் தோ்வு வாரியத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரி பாா்ப்பு பணி மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஆசிரியா் தோ்வு வாரியத்தால் முதுகலை பட்டதாரி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான தோ்வு தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி மதுரை ஓசிபிஎம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதல் நாள் சான்றிதழ் சரிபாா்ப்பு பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சான்றிதழ் சரிபாா்ப்பு பணிக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.சுவாமிநாதன் தலைமை வகித்தாா். இதில் மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் உதவி கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா். முதல் நாள் நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்பு பணியில் 214 போ் பங்கேற்றனா். இதில் பங்கேற்றவா்களின் இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் இளநிலை கல்வியியல் பட்டயச்சான்று ஆகியவற்றின் அசல் மதிப்பெண் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் சரி பாா்க்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT