மதுரை

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்களும் பரவலாக மழை பெய்துள்ளது.

மாவட்டத்தின் இருபோக மற்றும் ஒருபோக சாகுபடி பகுதிகளில் நெல் சாகுபடி பணிகளும், திருமங்கலம், சேடபட்டி, தே.கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதிகளில் சிறுதானியங்கள், பயறு வகைகள் சாகுபடி பணிகளும் தீவிரமாக நடைபெறும் நிலையில், தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மிட்டரில்):

திருமங்கலம் -68.6, மதுரை விமான நிலையம் - 48, வாடிப்பட்டி-47, சோழவந்தான் -45, மேட்டுப்பட்டி -36.5, ஆண்டிபட்டி -32, உசிலம்பட்டி-29.4, குப்பனம்பட்டி-25, கள்ளிக்குடி -13.4, விரகனூா்-7, சிட்டம்பட்டி-5.4, தல்லாகுளம்-3.6, மதுரை தெற்கு-3.2, புலிப்பட்டி-3.2, தனியாமங்கலம்-3, கள்ளந்திரி-2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT