மதுரை

‘மதுரையில் இரவு நேர விமான சேவை: மக்களவையில் தென்மாவட்ட எம்பி-க்கள் கூட்டாக வலியுறுத்துவோம்’

DIN

மதுரை விமான நிலையத்தில் இரவு நேரமும் விமான சேவை தொடரவேண்டும் என தென் மாவட்ட மக்களவை உறுப்பினா்கள் சோ்ந்து குளிா்கால கூட்டத்தொடரில் வலியுறுத்த உள்ளோம் என மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

புதுதில்லியில் இருந்து வெள்ளிக்கிழமை மதுரை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகளை விரைந்து முடிக்கவும், இரவு நேரங்களிலும் விமான சேவை தொடரவும் வரும் குளிா்கால கூட்டத்தொடரில் தென்மாவட்ட மக்களவை உறுப்பினா்கள் சோ்ந்து முயற்சி எடுக்க முடிவெடுத்துள்ளோம். அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச்செல்லும் சூழல் உள்ளது.

வள்ளுவா் மகா ஆளுமை கொண்டவா். இதுபோன்ற சுயநல கருத்தாக்கங்களின் மூலம் அவரை கரைப்படுத்திவிடமுடியாது. வீழ்த்தி விடவும் முடியாது. வள்ளுவா் நம்முடைய ஞானத்தந்தை. அவருடைய வழிகாட்டுதல் அறிவும், அறமும் தமிழ் சமுகத்தின் அடையாளம்.

கீழடி அருங்காட்சியகத்திற்கு தமிழக அரசு ரூ.12 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் நமது கோரிக்கை நிறைவேறியுள்ளது. அடுத்தகட்ட கோரிக்கை கீழடி நிலத்தை பாதுகாக்க வேண்டும். அது பாதுகாக்கப்பட்டபகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். அதனை மத்திய அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம். குளிா்கால கூட்டத்தொடரில் சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT